தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்றக்‌ கூட்டரங்கில்‌ இன்று (2707.2023) தேர்தல்‌ நடத்தும்‌ அதிகாரி/மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, தலைமையில்‌ நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டுக்‌ குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ எம்‌.வி.வாணிஸ்ரீ (வார்டு-3), ம.சத்யா (வார்டு-12), ஏ.பிருந்தாதேவி (வார்டு-19), க.மகேஸ்வரி (வார்டு-27), க.மகாலட்சுமி (வார்டு-37), இரா.ராஜா (வார்டு-44), திருமதி ப.லிங்கேஸ்வரி (வார்டு-51), ச.மதுமிதா (வார்டு-58), செ.ரமாதேவி (வார்டு-68) ஆகியோர்‌ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌. இந்நிகழ்வில்‌ மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌, துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, மண்டலக்‌ குழுத்தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ உடன்‌ உள்ளனர்‌.