தமிழகத்தின் இராமநாதபுரத்தில் பிறந்து இன்று அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இவர் இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் டாக்டர் APJ அப்துல் காலம் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாமா?

பிறப்பு அக்டோபர் 15, 1931
இறப்பு ஜூலை 27, 2015
பெற்றோர் ஜைனுலாப்தீன், ஆஷியம்மா
பிறந்த இடம் இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமை பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954-ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர் அதன் பின் பிடிக்காத துறையில் பணியாற்றுவதை விட பிடித்த துறையில் மீண்டும் படிக்கலாம் என்று நினைத்த கலாம் 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.

பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.

1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

காலம் அவர்கள் பெற்ற விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
குடியரசுத்தலைவர் கலாம்:
2002-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு தனது குடியரசுத்தலைவர் பதவியினை அவர் பெற்றார். அதிலிருந்து 2007 வரை 5 ஆண்டுகள் அவர் குடியரசுத்தலைவராக சிறப்பாக பணிபுரிந்தார். தான் ஒரு விஞ்ஞானி மட்டுமில்லை சிறந்த தலைமைப்பண்பு கொண்டவர் என்பதனையும் அவரது பதவிக்காலத்தில் அவர் நிரூபித்தார். குடியரசு மாளிகைக்கு மாணவர்களை வரவழைத்து அவர்களை சந்தித்து உரையாடும் பழக்கத்தினை வைத்திருந்த அவர் ஒருமுறை பார்வை இழந்த மாணவரை சந்தித்து உரையாடினார். அந்த அளவிற்கு மாணவர்களுடன் உரையாடுவது அவருக்கு பிடித்த ஒன்று.

அப்துல் கலாம் இறப்பு:
பொதுவாக நம்முடைய இறப்பு வரும்போது நாம் நமக்கு பிடித்த விஷயத்தினை செய்து கொண்டிருக்கும்போது இறக்கலாம் என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் கலாமுக்கு அவருக்கு பிடித்த விஷயத்தினை செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்தார். ஆம் ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினாராக சென்ற கலாம். அந்த கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்தார். அவரது மறைவு இந்தியா முழுவதினையும் சோகமாக்கியது நாம் அறிந்ததே. அதோடு அவர் மறைந்த அன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

தமிழகத்தில் கலாமின் நினைவிடம்:
அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகிலே பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் வாயில் “இந்தியாகேட்” போன்று அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கட்டிடமானது “ராஷ்டிர பவன்” போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த நினைவிடத்தில் அவரது பல புகைப்படங்கள், அவற்றினை பற்றிய குறிப்புக்கள் மற்றும் அவருடைய வீணை வைத்த சிலை அமைப்பட்டிருக்கிறது.

மேலும் கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது. இதனை இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.


Hacklinkgrandpashabet
grandpashabet
meritbet giriş
casibom giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
casibom mobil
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
casibom
casibom giriş