தேவையானவை:
மஷ்ரூம் – 200 கிராம்
மைதாமாவு – 2 மேஜைக்கரண்டி
அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி
சோள மாவு – 1 மேஜைக்கரண்டி
புட் கலர் – சிறிது
பூண்டு – 8 பல்
சில்லி சாஸ் – 1 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
பொரிப்பதற்கு எண்ணெய் – தேவைக்கேற்ப
தாளிபதற்கு தேவையானவை
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1.
செய்முறை:
சுத்தப்படுத்திய காளான், வெங்காயம், பூண்டு மூன்றையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர், மைதாமாவு, அரிசிமாவு, சோளமாவு மூன்றையும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காளான் துண்டுகளை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். பின்னர், மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் தாளிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் புட் கலர், சோயாசாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பொரித்து வைத்துள்ள காளானில் உப்பு சேர்த்திருப்பதால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான மஷ்ரூம் மஞ்சூரியன் தயார்.