தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 3
தக்காளி – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 4
உளுந்து – ½ ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 ஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், மஞ்சள் தூள் வதக்கி உப்பு சேர்த்து 5 விசில் விடவும். வெந்ததும் மத்து வைத்து மசித்துக் கொள்ளவும். கத்திரிக்காய் கோசுமல்லி ரெடி.