இதென்னங்க கேள்வி? உடல் பருமனை குறைக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். அதுவும் பெண்கள்…! இதோ அதிகம் செலவில்லாத எளிய தமிழ் வைத்திய குறிப்புகள்.
*இஞ்சிச்சாறைக் கொதிக்க வைத்து அதில் அதே அளவு தேன் ஊற்றி ஆறியபின் தினசரி உணவுக்குப் பின் சாப்பிட்டு வர பருத்த உடல் விரைவில் குறையும்.
*தினமும் முருங்கை இலைச்சாறு 2 ஸ்பூன் காலை, மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
*5 பூண்டு பற்களை பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வந்தால் உடல் பருமன், தொப்பை, கொழுப்பு கட்டிகள் குறையும்.
*பானை போன்ற வயிறு உள்ளோர்கள் வாழைத்தண்டு சாறு எடுத்து அவ்வப்போது அருந்தி வந்தால் நாளடைவில் வயிறு சுருங்கும்.
*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சமைத்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.
*பொன்னாவரை கீரையின் விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர் மலம், சிறுநீர் வழியாக வெளிப்பட்டு உடல் பருமன் குறையத் தொடங்கும்.
*பப்பாளிக்காயை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால் தடித்த உடல் குறையும்.
*அருகம்புல் சாறு, பூசணி சாறு ஏதாவது ஒன்று குடித்து வர உடல் பெருக்கம் தானாகவே குறையும். உடலும் அழகு பெறும்.
*தினசரி காலை பல் துலக்கியதும், 1½ ஸ்பூன் தேனை சூடான வெந்நீரில் கலந்து குடித்தால் விரைவில் உடலின் எடை குறையும்.