கக்னிசென்ட் நிறுவனம், ‘கிலியட் சயின்சஸ்’ உடன் 800 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கிலியட் சயின்சஸ் நிறுவனத்தின், டிஜிட்டல் உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட விஷயங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கக்னிசென்ட் நிறுவனம் பராமரிக்கும். இதன் மூலம், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் மற்றும் புற்றுநோய் மருந்துகளை கிலியட் சயின்சஸ் விரைவாக தயாரிக்கும்.