இஷான் கிஷன் அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் (34 பந்தில் 52 ரன்) அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடுவதாலும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவதாலும் இவரால் ரிஷப் பண்ட் இடத்தை நிரப்ப முடியும் என்ற கருத்துகள் உலா வருகின்றன. ஆனால் பல இன்னிங்ஸ் ஆடினால்தான் இஷான் கிஷன் திறமையை கணிக்க முடியும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கூறியுள்ளனர்.