மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் (ஜூலை 25) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.