மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இன்று (24.07.2023) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு குழந்தைகள் நலப் பிரிவு கட்டடப் பணிகளையும், கட்டடத்திற்கான வரைபடத்தினையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, தேசிய நல வாழ்வு குழுமத் திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர். அழகுமீனா, உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.