தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் -3 ஸ்பூன், கடுகு 1ஸ்பூன், உளுத்தம் பருப்பு, 1/4ஸ்பூன் வெந்தயம், -1/4ஸ்பூன் பெருங்காயத்தூள், -1/4ஸ்பூன் மஞ்சள் தூள், – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – 10கொத்தமல்லி – சிறிதுவெங்காயம் -2தக்காளி, -3 புளி -லெமன் அளவு வதக்கி அரைக்க வேண்டியவை: மிளகு, 3கடலைப் பருப்பு 1சீரகம் 1சிகப்பு மிளகாய் 4 செய்முறை: முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் அதில்ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை, போட்டு தாளித்து, வெங்காயம் வதக்கி பிறகு தக்காளி, வதக்கவும்.அதனுடன் அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும். பின் அதில் கொஞ்சம் தண்ணீரை விட்டு,பிறகு புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். குழப்பு நன்கு கொதித்து இறக்கவும். மிளகு குழம்பு ரெடி.