பூசணி விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துகளையும், மருத்துவ குணத்தையும் கொண்டவை. ஆனால் பெரும்பாலும் இவை உணவில் பயன்படுத்தப்படுவதில்லை. பூசணி விதையின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பூசணி விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின் இ நிறைவாக உள்ளது. பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் அன்றாடம் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
பூசணி விதையில் உள்ள மக்னீசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது. பூசணி விதைகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பூசணி விதையில் உள்ள ஒமேகா 3 இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். சர்க்கரை உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பூசணி விதைகள் உதவுகின்றன.
பூசணி விதைகளை சாப்பிடுவதால் செரோட்டின் ஹார்மோன் சுரக்க உதவுகிறது. இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும். பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் வலி குறையும்.