மக்களவையில், சிறிய அளவில் கடன் பெற்றவர்கள் அதை திருப்பி செலுத்த முடியாதநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கைகளை சில வங்கிகள் எடுப்பதாக புகார்கள் வருகின்றன. கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.