உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் உள்ள 17ம் நூற்றாண்டு தேவாலயத்தை குண்டு வீசி தகர்த்துள்ளது. தேவாலயத்தின் கட்டடமும், உள்ளே இருந்த சிலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கலாச்சாரத்தை சிதைப்பதை மன்னிக்க முடியாது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று உக்ரைன் கூறியுள்ளது.