தமிழ் திரையுலகில் 1980-90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த நளினி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நளினி, “ராமராஜன் மிகவும் தங்கமானவர். விவாகரத்து ஆனாலும் ராமராஜனை இன்னும் நான் காதலிக்கத்தான் செய்கிறேன். இது அவருக்கும் தெரியும்” என்றார்.