
மதுரை, அழகர்கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று (ஜூலை 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பெருக்கு தேரோட்டம் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.