
மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இன்று (24.07.2023) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகளின் பிரிவினைப் பார்வையிட்டு, நோயாளிகளிடம் நலம் விசாரித்து, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தேசிய நல வாழ்வு குழுமத் திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர். அழகுமீனா, அவர்கள் உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.