தென் கொரியா – வட கொரியா இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் தனது 2வது நீர்மூழ்கி போர்க் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் அனாபோலிஸ்’ என்றழைக்கப்படும் இந்தக் கப்பல், தென் கொரியாவின் தெற்கு தீவான ஜெஜூவில் உள்ள கடற்படை தளத்தை அடைந்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து நட்பை பறைசாற்றும் வகையில், அணிவகுப்பு நடத்தவுள்ளன.