மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க கூட்டம் ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள சுபிக்ஷா மகாலில் நடைபெற்றது.
இதில் புதியதாக மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன்.இ.ராஜமாணிக்கம், செயலாளராக லயன்.இ.சதிஷ்குமார், பொருளாளராக லயன்.ஆர்.வி சங்கர் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில் முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன்.ஏ.டி.ரவிச்சந்திரன், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் லயன்.பி.மணிசங்கர் ஆகியோர் முறைப்படி பதவியேற்பு மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.
அப்போது இ.ராஜமாணிக்கம் அவர் துணைவியார் இருவருக்கும் மாலை அணிவித்து, மலர் கீரிடம் சூடப்பட்டு அழைந்துவந்து இருக்கையில் அமரவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்லாவர சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கலந்துக்கொண்டு புதியதாக பதவியேற்ற அரிமா நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்
மேலும் அவர் பேசுகையில் அரிமா சங்க நிர்வாகிகள் தங்களின் தொண்டுள்ளத்துடன் செயல்படுவதாகவும் அவர்கள் எந்த நேரத்திலும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிகாக தன்னிடம் கேட்டால் தான் சொந்த நிதியில் இருந்து செய்து தருவதாக தெரிவித்தார்.
அதுபோல் பல்லாவரம் தொகுதியில் மக்கள் பணியில் மிகுந்த அக்கரையுடன் பணியாற்றிவரும் தன்னை லயன் சங்கத்தில் சேர அழைப்பு விடுத்தனர். ஆனால் தானும் அரிமா சங்கத்தில் உள்ள நிர்வாகிகளுடன் ஒன்று சேர்ந்து பணி செய்வதிலும் அவர்களின் ஆலோசனையை பெற்று பணியாற்றி வருவதாக கூறினார்.
மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கல்வி உதவிகள், ஏழை எளியோர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அஸ்தினாபுரம் முன்னாள் அரிமா சங்கத் தலைவர் எம்.ஜெயபால், மதுரை வீரன், காஞ்சி கணேசன், கே.எம்.ஜே .அசோக், சன்உதயம், கோவிந்தராஜன், டி.அசோகன், மாவை மகேந்திரன், எம் சார்லஸ் உள்ளிட்ட அரிமா சங்கத்தினர் பங்கேற்றனர்.