மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுர தாக்குதலை தடுக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிமளா சிட்டிபாபு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், கிரிஜா சந்திரன், சசிகலா கார்திக் உள்ளிட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது திடீரென மழை பெய்த நிலையில் கொண்டும் மழையிலும் ஆர்பாட்டத்தை தொடந்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மண்டலகுழு தலைவர்கள் ஜெயபிரதீப் சந்திரன்,காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெகன், சுரேஷ், ஜோதிகுமார், சிட்லப்பாக்கம் ஜெயந்தி முரளி, பூங்கோதை தனசேகர், பத்மா பழனி, டா.பேகம், பல்லாவரம் கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்…