மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் இனக்கலவரத்தை தடுக்காத மத்திய பாஜக மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தாம்பரம் பெரிய மசூதியில் இருந்து ஊர்வலமாக வந்த நிலையில் சண்முகம் சாலையில் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், மதிமுக, விடுதலைச்சிறுத்தை கட்சி, திரவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவு கட்சிகளின் நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.