
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து விழாப் பேரூரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.