மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்கள் மீது நடைபெறும் பாலியல் தாக்குதலை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும்மையாக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தில் பாலவாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது யூசுப் தலைமை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைமை நிலைய செயலாளர் ஜைனுல் ஆபிதின், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோமு, விடுதலைச்சிறுத்தை கட்சி காஞ்சி-விழுப்புரம் மண்டல செயலாளர் சூ.க.செழியன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், இயக்க நிர்வாகிகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்று மத்திய, மணிப்பூர் மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புகாக இருந்த போலீசார் மோடியின் உருவ பொம்மையை பிடிங்கி சென்றனர்….