தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய பதினாறாம் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21 தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தலையில் கிரகமாக எடுத்து அப்பகுதியில் ஊர்வலம் கொண்டுவரப்பட்ட திருநங்கைகள் பலர் அம்மனுக்கு அழகு குத்தி வழிபட்டனர்.

ஊர்வலமாக சென்ற கரகம் பின்பு ஆலயம் வந்தடைந்தது. அங்கு பம்பை உடுக்கை சத்தங்கள் முழங்க திருநங்கை ஒருவர் சாமியாடியது அங்கு இருந்தோரை பக்தி பரவசம் அடையச் செய்தது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்த்தல் நடைபெற்றது.

16 ஆண்டுகளாக நடைபெறும் இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி ஊரைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமான கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.