
திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி என மொத்தம் 199 இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் செம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கூறுகையில் :-
அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் செய்யக்கூடிய தவறுகளை, மக்கள் விரோத செயல்களை கண்டித்து ஆங்காங்கே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என தலைவர் அண்ணாமலை அறிவுரை தந்திருந்தார்.
அதன் அடிப்படையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பாஜக சார்பில் செம்பாக்கம் பகுதியில் காமராஜபுரம் பேருந்து நிலையம் முன்பு தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் என்னதான் நல்லவராக, வல்லவராக, ஊழலற்ற அதிகாரியாக இருந்தாலும்.
அவருடன் பணியாற்றும் மற்ற அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக அகற்றப்படாமல் உள்ள குப்பைகள், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.
கன்னடபாளையம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த குப்பைகளை அகற்றிவிட்டு அந்தப் பகுதியில் தாவிர காடுகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம்.
அங்கு தற்போது குப்பைகள் அகற்றி விடப்பட்டது ஆனால் மீண்டும் அப்பகுதியில் தான் குப்பைகளை எடுத்து செல்கிறார்கள்.
அங்குள்ள நிலத்தடி நீரை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சி எடுப்பதற்காக தான் அங்கு தாவர காடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறினோம்.
மத்திய அரசாங்கத்தின் உதவி வேண்டும் என்றாலும் பெற்றுத் தருகிறோம் என்று சொன்னோம்.
ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் மாநகராட்சி சார்பில் செய்யப்படவில்லை.
எனவே வருகின்ற 5ம் தேதி நாங்கள் உண்ணாவிரதத்தை தொடக்க இருக்கின்றோம்.
வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு வீடாக சென்று புகார் பொதுமக்களிடம் புகார் பெட்டியில் புகாரை பெற்று மக்கள் குறைகளை சரி செய்யும் பணிகளில் நாங்களே ஈடுபட போகிறோம்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றத்தை தமிழகம் பார்க்க இருக்கின்றது.
அதற்கு அடித்தளம் தான் என் மக்கள் என் மண் யாத்திரை பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரையாக வருகிறார்.
அந்த யாத்திரையை மக்கள் யாத்திரையாக நாங்கள் மாற்றி காட்டுவோம் எனவே மக்கள் குறைகளை எல்லாம் கையில் எடுத்து தலைவர் அண்ணாமலை யாத்திரை வருவதற்கு முன்பு தீர்த்து வைத்தால் நல்லது இல்லையென்றால் அவரை வைத்து அந்த யாத்திரையை போராட்டக் களமாக மாற்ற வைத்து விடாதீர்கள் என்பதை அதிகாரிகளுக்கு மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.