ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ படவேட்டம்மன் கோயிலில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உலக நன்மைகாக 400 க்கும் மேற்படட் பெண்கள் விளக்குகளை ஏற்றிவைத்து, கணபதி பூஜை, குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக ஸ்ரீ படவேட்டம்மன் மூலவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.