தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, சிட்லபாக்கம் வார்டு 43க்கு உட்பட்ட திருமுருகன் சாலையில் சாலை பணிகள் நடந்து கொண்டுள்ளது. பல ஆண்டு காலங்களாக குடிநீர் விநியோகிக்கும் குழாய் பழுதடைந்து இருக்கிறது. அதனை சாலை பணிகள் முடிவடைவதற்க்குள் புதிய குழாயை அமைப்பதற்கு சி.ஜெகன் எம்.சி கோரிக்கை வைத்ததால், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் புதிய குழாய் அமைப்பதற்க்கு ஆவனம் செய்தார். அவ்வாரே புதிய குழாய் அமைக்கப்பட்டு பணி நிறைவடைந்துள்ளது. இந்த பணி நிறைவடைவதர்க்கு உறுதுணையாக இருந்த இளநிலை பொறியாளர் பழனி, ஃபிட்டர் ராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய அனைவருக்கும் பகுதி வாழ் பொதுமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.