தாம்பரம் மாநகராட்சி 2,3 மண்டல குடியிருப்போர் நலவாழ்வு சங்க இணைப்பு மைய்யம் சார்பில் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட நலச்சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழை காலத்திற்கு முன்பாக மழை நீர் கால்வாய்களை தூர் வார வேண்டும். 50வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருபோர் குப்பைகளை அவர்களே தீர்வு காண வேண்டும் என்கிற உத்திரவை மாநகராட்சி திரும்ப பெற வேண்டும். அஸ்தினாபுரம் செல்லும் ஆர்.பி சாலையை அகலப்படுத்த வேண்டும். வைஷ்ணவா கல்லூரி ரெயில்வே கடவு பாதையில் இருவழி வாகன போக்குவரத்து செல்லும் விதமாக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்பாட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி 2,3 மண்டல நலவாழ்வு சங்க இணைப்பு மைய்ய தலைவர் மு.சி.பலராமன், செயலாளர் சி.முருகையன், பொருளாளர் சி.அரசி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு நலச்சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்…