ஆடி மாதத்தில் அம்மனை தரிசிப்பது விசேஷமானது. அம்மன் தனியே மூலதெய்வமாக கொலுவிருக்கும் கோவில்களில் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அதே போல சிவன் கோவில்களில் தனி சந்நதியில் வீற்றிருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கும் பிரத்யேக ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன.
அம்மன் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் கிராமப்புறங்களில் பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை மேற்கொண்டு அம்பிகையை மகிழ்விக்கிறார்கள்.
அந்த வகையில் இங்கே சில அம்மன்களை தரிசிப்போம்.
சாமுண்டீஸ்வரி
வலக்கரங்களில் சூலம்,கத்தி,சக்தி, சக்கரம்,அம்பு, சங்கம்,வஜ்ரம், அபயம்,உடுக்கை, சிறிய கத்தி.இடதுகரங்களில் நாகம்,பாசம், கேடயம்,கோடரி, அங்குசம்,வில்,மணி, கொடி,கண்ணாடி ஆகியன ஏந்தியிருக்கிறாள்.
மகிஷாசுரன்தன் தலை துண்டிக்கப்பட்டு, சாமுண்டீஸ்வரியின் சூலத்தினால் மார்பில் குத்துண்டு, அவளுடைய வாகனமான சிம்மத்தினால் கடிபட்டும் தேவியின் காலடியில் கிடக்கிறான்.அம்மன் தனது வலதுகாலை அவன் மீதும், இடதுகாலை சிம்மத்தின் மீதும் ஊன்றி,அந்த சிம்மத்தின் மீதே அமர்ந்தவளாக அருட் காட்சியளிக்கிறாள்.
அங்காள பரமேஸ்வரி
சிவந்த மேனி கொண்டவளாய், வெண்பட்டாடை உடுத்தியவளாய் விளங்கும் இந்த தேவி காளை மீது அமர்ந்தவளாகச் சித்திரிக்கப்படுகிறாள்.கத்தி,சூலம், பாசம்,மண்டையோடு இவற்றுடன் தீச்சுடர் திருமுடி கொண்டவளாக இத்தேவி அருள்கிறாள்.
காட்டேரி அம்மன்
சிவந்த மேனியும், உயரத் தூக்கிக் கட்டப்பட்ட கூந்தலையும் கொண்டிருக்கிறாள் இந்த அம்மன். குறைவான ஆடையும்,வற்றிய உடலையும் கொண்டு கத்தி,உடுக்கை, சூலம்,சக்கரம், தண்டம், மணிமாலை, தாமரை,கேடயம் இவற்றைக் கைகளில் கொண்டவளாக காட்டேரி அம்மன் திருவருட்பாலிக்கிறாள்.
காத்தாயி அம்மன்
பிறை நிலவைச் சடை முடியில் கொண்டு,தங்க மேனியுடன் திகழ்கிறாள் இந்த அம்மன். பட்டாடை அணிந்து தாமரை, மணி,சூலம்,கோடரி, சங்கம்,அம்பு,வில், கேடயம்,வரதம் ஆகியவற்றைக் கொண்டவளாக காத்தாயி தேவி தோற்றமளிக்கிறாள்.
பேச்சியம்மன்
கருநிற மேனி கொண்டவளாக கத்தி,கதை,சூலம், உடுக்கை,பாசம், மண்டையோடு, தாமரை ஆகியவற்றுடன் ஒரு குழந்தையை அணைத்த கரத்துடன் அருள்பாலிக்கிறாள் பேச்சியம்மன். இருகால்களைப் பீடத்தில் தொங்கவிட்டு அவை கணவன், மனைவியின் தலையில் வைத்த நிலையில் பேச்சியம்மன் தரிசனமளிக்கிறாள்.
பிடாரியம்மன்
சுடர்முடியுடன் கைகளில் கபாலம், மணி, கேடயம், விஸ்மயஹஸ்தம், சூலம், டமருகம், கத்தி, வேதாளம் ஆகியவற்றைத் தாங்கி ஒரு காலைக் குத்திட்டு மறுகாலை அரசன் மீது ஊன்றிய திருக்கோலமாய் பிடாரியம்மன் வழிபடப்படுகிறாள்.
பத்ரகாளியம்மன்
நீல வண்ண மேனிகொண்டு, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் ஆலீடாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் பத்ரகாளியம்மன்.
அபயம், சூலம், கத்தி, ஸ்வரும், பத்மம், கத்தி, மணிமாலை, அம்பு, மான்தோல், வில், சங்கம், தீச்சுடர், கெண்டி, கேடயம், தடி, ஸ்ருக்கு, பாத்திரம், வரதம் என பதினெட்டு திருக்கரங்களில் பதினெட்டு வகைப் பொருட்களைத் தாங்கியருள்பவள் இத்தேவி.
ராஜ ராஜேஸ்வரி
செம்பருத்தி மலர் மாதுளம் மலர் போன்றும், குங்குமப்பூவின் நடுவைப் போன்று ஒளி பொருந்திய சிவந்த மேனியும், கோடி கதிரவனின் ஒளியை உடையவளும், இளமதியினைத் திருமுடியில் அணிந்து, பாசம், அங்குசம், கரும்பு வில், மலரம்புகள் இவற்றுடன் அசைவற்ற ஆயிரம் மின்னலை ஒத்த மஞ்சள் நிறப் பட்டாடையை அணிந்திருப்பவளும், அரியணையில் வீற்றிருப்பவளுமாக இந்த ராஜ ராஜேஸ்வரி அம்பிகை அருள்கிறாள்.


Hacklinkgrandpashabet
grandpashabet
jojobet
setrabet
Hair Transplant istanbul
da pa kontrolü
jojobet
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu 2024
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
betnano giriş
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
izmir escort
casibom mobil
casibom giriş
İstanbul Escorts
İstanbul masöz
Betturkey