குரோம்பேட்டை புருஷோத்தம நகர் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபா தாரனை செய்யப்பட்டு முழுவதும் வளையல் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.