விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிரேமலதா தலைமையில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்குவது. விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. பிரேமலதா தலைவராகும் பட்சத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முற்றிலும் அரசியலில் இருந்து விலகி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.