தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட 5 வது மண்டலத்தில் கிழக்கு தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளில் 151 தெருக்கள் உள்ளடக்கிய 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.10 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார். அப்போது 5 வது மண்டலகுழு தலைவர் இந்திரன், 4 வது மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா, ஜோதிகுமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
அப்போது சாலைபணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினார்.