தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்த பெண் சீபா(35) சில மாதம் முன்பாக குடும்ப பிரச்சினை காரணமாக தாம்பரம் காவல் நிலையில் சென்றுள்ளார்.
அப்போது வேறு ஒரு புகார் சம்மந்தமாக அதே இரும்புலியூர் ஜெருசலம் நகரை சேர்ந்த தாம்பரம் 53 வட்ட செயலாளர் குமணன்(47) என்பவர் சீபா செல்போன் என்னை பெற்றுள்ளார்.
நாட்கள் போக போக தரகுறைவான வார்த்தைகளாலும் பாலியியல் தொல்லை கொடுக்கும் விதமாக குறுஞ்செய்திகளையும், ஆடியோகளையும் அனுப்பியுள்ளார்.
இதனால் சீபா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் குமணணை பிடித்து அவரின் செல்போனை ஆய்வு செய்து குற்றம் செய்தது உறுதியானது.
இதனையடுத்து தாம்பரம் குற்றவியல் நடுவர் முன்பாக குமரனை ஆஜர் படுத்தி புழல் சிறையினர் அடைத்தனர்.