காய்கறி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும் இவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசையும் கண்டும் காணாமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்டக் கழக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகா சாலையில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
தாம்பரம் மத்திய பகுதிக் கழகச் செயலாளர் எல்லார் செழியன், தாம்பரம் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் எம்.கூத்தன், தாம்பரம் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் ஏ.கோபிநாதன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதா சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை கே.மனோகரன், , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.தனபால், மாவட்டக் கழக துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவராகமூர்த்தி பல்லாவரம் பகுதி கழகச் செயலாளர் ஜெய் பிரகாஷ் செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன் பம்மல் பகுதி கழக செயலாளர் அப்பு என்கிற வெங்கடேசன் குரோம்பேட்டை பகுதி செயலாளர் சதீஷ் மாவட்ட பொருளாளர் பரசுராமன் மாவட்ட நிர்வாகிகள் புருஷோத்தமன் தில்லை ராஜ் உட்பட மாவட்டக் கழக, ஒன்றிய, பகுதி, பிற அணி நிர்வாகிகள், கிளைக் கழக, வட்டக் கழகம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான கழகத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்.