செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர் தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.ராகுல்நாத், முன்னிலையில் நடைபெற்றது. உடன் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் ஆ.ஜான்லூயிஸ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா, பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக்சீவாஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் இந்துபாலா மற்றும் அனைத்துத் துறை அரசு உயர் அதிகாரிகள் உள்ளனர்.