ஜம்மு-காஷ்மீரின், ரியாசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் புதிய பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கத்ரா நகரில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.