நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க வலியுறுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது ஆளுநர் மூலம் நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் பிரச்சனை எழுப்புவோம். விலைவாசி உயர்வு, அதானி குழுமம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்புவோம். டெல்லி நிர்வாகம் தொடர்பான ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கும் எனவும் கூறினார்.