சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E வைட்டமின் B6 மற்றும் போலேட் (folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது.
சேப்பங் கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய வல்லமை சேப்பங்கிழங்குக்கு உண்டு. சேப்பங்கிழங்கு இலையில் நீரிழிவு நோயை அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது.
சேப்பங்கிழங்கு கொழுப்பு இல்லாதது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. பெண்கள் கருவுற்ற காலத்தில் உடலுக்கு சத்துக்களை தரும் ‘போலேட்’ நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. சேப்பங்கிழங்கில் இந்த ஃபோலேட் சத்து அதிகம் உள்ளன.
சேப்பங்கிழங்கை அரைத்து பூச்சிக் கடி பட்ட இடத்தில் தடவுவதால் உடலில் பரவும் விஷம் முறிகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்கனவே சாப்பிட்ட உணவில் கலந்திருக்கும் நஞ்சும் முறிந்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
சேப்பங்கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.