அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது – லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தகவல்

வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

2001-06 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்திருந்தது.