திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதவன் (23) பி.இ மெக்கானிக்கல் என்ஞனியரிங் படித்து முடித்த நிலையில் நேற்று காலை வேலை தேடி தனது சொந்த ஊரில் இருந்து குரோம்பேட்டை சி.எல்.சி லைனில் தனது நண்பர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தனது உடைமைகளை எடுப்பதற்காக சென்ற போது அதில் ஒரு துணி அருகில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் விழுந்துள்ளது அதனை இரும்பு கம்பி கொண்டு எடுக்க முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.