இன்றைய நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்துகின்றனர். தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளவும் முதன்மை செயலியாக வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால் எந்த அளவிற்கு வாட்ஸ் அப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளதோ அதே அளவிற்கு வாட்ஸ் அப் வழியாக மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக சமீப காலமாகவே பல வாட்ஸ் அப் யூசர்களுக்கும் தெரியாத எண்களில் இருந்து பல்வேறு அழைப்புகள் வருவதாகவும், அதில் சிலர் மோசடி செய்யும் எண்ணத்துடன் கால் செய்வதாகவும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே இது போன்ற சைபர் குற்றங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. எனவே தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பற்றியும் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றியும் இங்கே பார்ப்போம்
அந்த வகையில் “Do Not Disturb” மோடை ஆன் செய்யலாம்:
இன்றைய நிலையில் சந்தையில் வெளிவரும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் Do not disturb என்ற வசதி உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட எண்களையோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வரும் கால்கள் மற்றும் நோட்டிபிகேஷன் ஆகியவற்றை நீங்கள் மியூட் செய்து வைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்க்க முடியும்.
தெரியாத எண்களை பிளாக் செய்வது:
அடிக்கடி ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து அழைப்புகள் வந்து உங்களை தொந்தரவு செய்து கொண்டிருக்கும் போது, அந்த எண்ணை பிளாக் செய்வது மிகவும் நல்லது. இதற்கு உங்களது வாட்ஸ் அப் சாட்டை ஓபன் செய்து, எந்த எண்ணை பிளாக் செய்ய வேண்டுமோ அதனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு ஆப்ஷனை செலக்ட் செய்து Block Contact ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இதனை அடுத்து பிரைவேசி செட்டிங்கில் மாற்றம் செய்வது:
வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டின் படி யார் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கான கட்டுப்பாடுகளை நீங்கள் விதித்துக் கொள்ள முடியும். இதற்காக வாட்ஸ் அப் செட்டிங்கிர்க்கு சென்று, Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் privacy என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் யார் உங்களை தொடர்பு கொள்ள முடியும் போன்ற விவரங்களை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மூன்றாம் தரப்பு செய்திகளை பயன்படுத்துவது:
ஆப் ஸ்டோர்களில் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி மிக எளிதாக தெரியாத எங்களிலிருந்து வரும் எண்களை நீங்கள் பிளாக் செய்து கொள்ள முடியும்.
மேலும் ரிப்போர்ட் செய்யும் வசதி:
சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து உங்களுக்கு அடிக்கடி கால்கள் வருவதும் உங்களை தொந்தரவு செய்வதுமாக இருந்தால், அந்த எண்ணை நீங்கள் வாட்ஸ் அப்பிற்கு ரிப்போர்ட் செய்ய முடியும். மேலும் அதற்கான பின்னூட்டத்தையும் வாட்ஸ் அப்பிற்கு அளித்து உங்களது புகாரைப் பரிசீலனை செய்வதை எளிமையாக்க முடியும்…..