
சிட்லபாக்கம் ரோசிலி மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் டாக்டர். ஜே. விட்டோ பிளாக்கா கலந்து கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியில் தனது பயணத்தை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பிரதம விருந்தினர் கே.பிருதிவிகுமார், பள்ளி இன்னும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக முன்னேற வாழ்த்தினார். சந்திரவேல் சிறப்புரைகள் ஆற்றினார். பள்ளி முதல்வர் டி.ஜோதி ரம்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் என்.சி.ஜெயலட்சுமி பள்ளியின் வரலாறு குறித்து பேசினார். மாணவர்கள் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கினர். விழா பள்ளி துணை முதல்வர் எஸ்.காயத்திரியின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.