தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32-வயதான அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அரவிந்த்க்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து 7-வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு (Okacet.L) என்ற மாத்திரையை கொடுத்த பிறகு அவரது மனைவி 32-வயதான சுஜிதாவிற்கும் அதே மாத்திரை கொடுத்த பிறகு அவரது வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்துள்ளார்.
பின்னர் அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும் லேசாக அறுத்து கொண்டதில் மயக்கமடைந்துள்ளார்.
அவரது உறவினர்கள் அரவிந்த்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அரவிந்த் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையிலும் இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக அரவிந்த்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விசாரணையில் கடன் தொல்லை அதிகரித்தால் வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து இதுபோன்று சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.