தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் டேனியல்(23) வீட்டில் குடும்ப சண்டை காரணமாக பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அங்கு முதல் மாடியில் இருந்த அவர்கள் மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் டேனியல் தற்கொலை என்னத்துடன் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். அங்கு சென்ற உயர் மின் அழுத்த கம்பிகள் இடையே சிக்கி உயிருக்கு போராடினார்.
இது குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் மின்சார துறையினர் மூலம் மின்சாரமும் நிறுத்தப்பட்டு தீயணைப்பு வீரர்கள் டேனியலை மீட்டு அந்த வானத்தின் மீதே சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து உயிர் காக்க முயன்றனர் ஆனால் டேனியல் உயிரிழந்தார். தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் பிரேத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறற்கள்.
மின்சார கம்பிகள் இடையே உடல் சிக்கிய காட்சியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டடது…