தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில் வரும் 23ம் தேதி 199 இடங்களில் ஆர்ப்பாட்டம்
மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தகவல்
தாம்பரம்,
மேகதாது அணை பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கறுப்பு சட்டை அணிந்தபடி சேலையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் பேசுகையில் :
காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் முயற்சி
கர்நாடக காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து திமுக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கின்றது.
தொடர்ந்து தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பச்சை துரோகம் செய்து கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தமிழகத்தை பாலைவனமாக ஆக்கக்கூடிய மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் வாய் மூடி மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தொடர்ந்து தமிழர்கள் உடைய நலனுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ் இனத்திற்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்யக்கூடிய மக்கள் விரோத அரசாக செயல்பட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் குறிப்பாக தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு மக்கள் விரோத பணிகள், தாம்பரம் திமுகவினர் இடையே உள்ள கோஷ்டி பிரச்சினைகளால் தாம்பரம் மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் சாலைகள் அமைப்பது, காண்ட்ராக்ட் விடுவது, மேயர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மாமன்ற உறுப்பினர்கள் மூலமாகவே எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவை எல்லாவற்றையும் மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக வருகின்ற 23ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுடைய 70 வார்டுகளிலும், 6 ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பட்டியலை நாளை 19ம் தேதி மாலை வெளியிடே இருக்கின்றோம்.
தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் கிட்டத்தட்ட 76 இடங்கள், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியின் உடைய மூன்று நகர மன்றங்களான செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் இருக்கின்ற அனைத்து வார்டுகள், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் இருக்கின்ற 39 ஊராட்சிகள் என செங்கல்பட்டு மாவட்டத்தில் 199 இடங்களில் பாஜ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக தலைவர் அண்ணாமலை லட்சக்கணக்கான பாஜவினரை ஒன்று திரட்டி தமிழக முதல்வருக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளார்.
இவர் அவர் பேசினார்.