சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி, போதை விழிப்புணர்வு மன்றத்தின் சார்பிலும், மூத்த குடிமக்கள் சார்பிலும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இக்கூட்டத்திற்கு விகி வில்யம் தலைமையாசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் லஷ்மி, ஷி.மீனாட்சி சுந்தரம், கிஙிநிறி ஹரிதாசன், நி பக்தவசலம் வியாபாரிகள் சங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாணவ மாணவியர்களுக்கு போதை, குடியின் தீமைகளை எடுத்துரைத்துரைத்தனர். போதை இல்லா பள்ளி எக்காலத்திலும் போதை தீயவஸ்துகளுக்கு இடம் தர மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் மாணவ மாணவிகள். நன்றி சுகுணா கூறினார்.