சோனியா காந்தி அரியானா பெண் விவசாயிகளை நேற்று(ஜூலை 16) மதிய உணவிற்கு வருமாறு அழைத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, இல்லத்திற்கு வந்த பெண் விவசாயிகளை சோனியா காந்தி வரவேற்றார். பின்னர் அவர்களுடன் நடனமாடி, மதிய உணவு பரிமாறி மகிழ்ந்தார். இந்த விருந்தில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.