இந்தியாவில் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் கணக்கு தாக்கல் செய்ய வருகிற ஜூலை – 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது பெய்து வரும் பருவமழை மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்து உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

அதனால் வருமான வரி செலுத்துவோர் உரிய கால கெடுவுக்குள் விரைந்து கணக்கு தாக்கல் செய்யுமாறு வருவாய் துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அத்துடன் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் முதலில் ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.