ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைக்கப்பட்ட பிறகு, இந்த 2 நிறுவனங்களும் இணைந்து ஒரே பங்காக மாறியுள்ளது. இதனால், ஹெச்டிஎஃப்சி பங்குதாரர்களுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் 311 கோடிக்கும் அதிகமான புதிய பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது HDFC முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 25 பங்குகளுக்கும் HDFC வங்கியின் 42 பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.