
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று(ஜூலை 17) கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்ற நிலையில், இன்று ரூ.120க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.