தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 147வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் சாவடி தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ஆகியோர் மாலை அணிவித்து மறியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா, மற்றும் மறைமலை அடிகளாரின் வாரிசுகள் உள்ளிட்டோர் மலர்துவி மறியாதை செய்தனர்…